×

பெட்ரூம் காட்சியில் நடித்த ஸ்ருதி: நெட்டிசன்கள் எதிர்ப்பு

மும்பை: பெட்ரூம் காட்சியில் நடித்த ஸ்ருதிஹாசனுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் லேசான கவர்ச்சி காட்டும் நடிகைகள் கூட, வெப்சீரிஸில் எல்லை மீறி கவர்ச்சி காட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளது. பேமிலிமேன் 2 வெப்சீரிஸில் படுக்கையறை காட்சியில் சமந்தா நடித்திருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல் இப்போது ஸ்ருதிஹாசனின் வெப்சீரிசுக்கும் கண்டனம் குவிந்து வருகிறது.

பெஸ்ட் செல்லர் என்ற இந்தி வெப்சீரிஸில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மிதுன் சக்ரவர்த்தி, சோனாலி குல்கர்னி, அர்ஜன் பஜ்வா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸ் கடந்த வாரம் அமேசான் பிரைமில் வெளியானது. இதில் அர்ஜன் பஜ்வா, நாவல் எழுத்தாளர் கேரக்டரில் நடித்துள்ளார். அவரது தீவிர ரசிகையாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். அர்ஜன் பஜ்வாவுடன் படுக்கையறை காட்சியில் ஸ்ருதிஹாசன் நெருக்கமாக நடித்துள்ளார். இந்த காட்சிகளுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த காட்சியை வெப்சீரிஸிலிருந்து நீக்க வேண்டும் என்றும் இதில் நடித்த ஸ்ருதியை விமர்சித்தும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags : Sruthi , Sruthi starring in the bedroom scene: Netizens protest
× RELATED ஐதராபாத்தில் காரை அழகான கடையாக...